9 ரன்களில் சதத்தை தவற விட்ட இலங்கை வீரர்! நேர்த்தியான ஆட்டத்தால் அணியை சரிவில் இருந்து மீட்ட ஜோடி
வெஸ்ட் இண்டீஸ் அணியுடான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 255 ரன்கள் எடுத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த 21ஆம் திகதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்தது. இந் நிலையில் 102 ரன்கள் பின்னிலை வகித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.
West Indies vs Sri Lanka | 1st Test | Day 3
— TOI Sports (@toisports) March 24, 2021
Oshada Fernando leads Sri Lanka's fightback
REPORT: https://t.co/Myt8gQkRhx#WIvSL #Cricket pic.twitter.com/JVbXk7Ysg9
அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டாலும் 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த லஹிரு திரிமான்ன - ஓசத பெர்னாண்டோவின் இணைப்பாட்டம் வலுவான இலக்கினை எட்ட இலங்கை அணிக்கு கைகொடுத்தது.
அதன்படி இவர்கள் 162 ரன்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் 56.1 ஆவது ஓவரில் ஓசத பெர்னாண்டோ 11 பவுண்டரிகள் அடங்கலாக 91 ரன்களுடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட, அடுத்து வந்த தினேஷ் சந்திமலும் 4 ரன்களுடன் வெளியேறினார்.
அவரின் வெளியேற்றத்தின் பின்னர் ஆரம்ப வீராக களமிறங்கிய லஹிரு திரமான்னவும் 76 ரன்களுஅன் கேமர் ரோச்சின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
#WIvSL 1st #Cricket Test Match Day 3: #SriLanka 255/4 with Lead of 153 runs good fight back Fernando 91 Thirimanne 76 Dhananjaya 45* can win this match with 300+ runs lead. #WestIndies batting lacks the patience to stay on crease and score runs. pic.twitter.com/YdLqqlpmry
— AK - Current Affairs (@CurentAffairs) March 24, 2021
இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை 86 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 255 ரன்களை குவித்து, 153 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.
Oshada Fernando and Lahiru Thirimanne put on a record 162-run stand for the second wicket! ? ?#WIvSL pic.twitter.com/95mqFKl2Qv
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 23, 2021