என்னால் நம்பவே முடியவில்லை! இதற்கு என்ன காரணம்? ஐபிஎல் ஏலம் தொடர்பில் இலங்கை வீரர் கேள்வி
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தாண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.
இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து ஏலத்துக்கான 292 வீரர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் இலங்கையின் குசல் பெரேரா, திசர பெரேரா, கெவின் கொத்திகொட, மஹேஷ் தீக்சன, விஜயகாந்த் வியஸ்காந்த், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க, இசுரு உதான ஆகிய 9 பேர் இடம்பிடித்தனர்.
எனினும், ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரு வீரர் கூட ஏலம் போகவில்லை. இது ரசிகர்களிடையே மட்டுமன்றி இலங்கை வீரர்களிடையேயும் பெரிய கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் அஞ்சலோ பெரேராவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ஐபிஎல்-ல் வனிந்து ஹசரங்க தேர்வு செய்யப்படவில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
It's hard to belive how Wannidu Hasaranga doesn't get picked in the @IPL.. Such an asset to any line up!! @bhogleharsha @cricketaakash what's stopping him from getting there?? ?
— Angelo Perera (@angiperera) March 4, 2021
அவர் எந்த வரிசையிலும் திறமையாக விளையாடக் கூடியவர். அவர் தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம் என இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் பத்திரிகையாளருமான ஹர்ஷா போக்லேவிடமும், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவிடமும் அஞ்சலோ பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் தொடர் நடக்கும் அதே காலப்பகுதியில் இலங்கை-வங்க தேசம் அணிகளிடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதாகவும், இதன் காரணமாக இரு அணி வீரர்களுக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி கிடைப்பது கடினம் என்பதால் ஏலத்தில் இரு நாட்டு வீரர்களும் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.