இலங்கை அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா! ஆசியக் கோப்பையில் சிக்கல்? ரசிகர்கள் அதிர்ச்சி
ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், இலங்கை அணியில் 2 வீரர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோவிட் - 19 சோதனை
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 30ஆம் திகதி தொடங்குகிறது. இலங்கையில் 9 போட்டிகளும், பாகிஸ்தானில் 4 போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் இலங்கை வீரர்களான குசால் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோருக்கு கோவிட் - 19 சோதனை செய்யப்பட்டது.
அப்போது இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இரு வீரர்களும் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கை அணிக்கு சிக்கல்
அவர்களின் தேர்வு எந்த வேகத்தில் மீண்டு வருகிறார்கள் என்பதை பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.
AFP
இலங்கை வீரர்கள் பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன், நட்சத்திர வீரர்கள் காயத்தில் சிக்கியதால் ஆசியக் கோப்பையில் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை தொடங்க 4 நாட்களே உள்ள நிலையில் நட்சத்திர வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |