தமிழகத்தில் ரயில் மோதி இலங்கைத் தமிழர் மரணம்; பொலிஸ் விசாரணை
தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ரயிலில் அடிபட்டு இலங்கை தமிழ் அகதி ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
சடலத்தை கைப்பற்றிய ரயில்வே பொலிஸார், இது விபத்தா அல்லது தற்கொலை முயற்சியா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகையா என அடையாளம் காணப்பட்ட 55 வயதுடைய அந்த நபர், இலங்கையின் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்.
இங்கிலாந்துக்காக செஸ் விளையாடும் இலங்கைத் தமிழ்ப்பெண்., சென்னை வருகையால் நெகிழ்ச்சி
கடந்த 32 ஆண்டுகளாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வருகிறார். இலங்கை உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் 1990-ஆம் ஆண்டு தமிழகம் வந்தவர்.
இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஏகேஎஸ் தோப்பு பகுதியில் உள்ள மண்டபம் முகாமில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
ஜூலை 6, புதன்கிழமை காலை, மண்டபம் கேம்ப் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, காலை 8.30 மணியளவில் ரயிலில் அடிபட்டார்.
ராமேஸ்வரம் ரயில்வே பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றினர். இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.