முதல் ஆளாக மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தினார் இலங்கைத் தமிழ்ப்பெண்: வீடியோ வெளியானது
இலங்கைத் தமிழ்ப்பெண்ணான Vanessa Nanthakumaran, முதல் ஆளாக பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி வெளியாகியுள்ளது.
மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, திங்கட்கிழமை அன்றே மகாராணியின் உடலைக் காண்பதற்காக புறப்பட்டு வந்துவிட்டார் Vanessa.
பொதுமக்களில் முதல் ஆளாக பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தினார் இலங்கைத் தமிழ்ப்பெண்ணான Vanessa Nanthakumaran.
மறைந்த பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பே, கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 12) அன்றே மகாராணியின் உடலைக் காண்பதற்காக புறப்பட்டு வந்துவிட்டார் Vanessa Nanthakumaran.
Vanessaவைத் தொடர்ந்து Anne Daley மற்றும் Grace ஆகிய பெண்கள் வந்து சேர, வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் திறக்கப்படும்வரை காத்திருந்த அவர்களை கனிவுடன் அணுகிய பொலிசார், அவர்கள் மூவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி அளித்து அவர்களை கவனித்துக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை, அதாவது புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு, மகாராணியாரின் உடலைக் காண பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Vanessa முதல் ஆளாக மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
Vanessa மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியின் ஒரு பகுதியை, வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
image - yahoo
Credit: Rex
Credit: Rex