புற்றுநோயை வென்ற இலங்கைத் தமிழரான பிரபல ஊடகவியலாளர் மரணம்
புற்றுநோயுடன் போராடிக்கொண்டே, கொரோனாவையும் வென்று பணிக்குத் திரும்பிய அசாதாரண இலங்கைத் தமிழரான ஜார்ஜ் அழகையா இயற்கை எய்தியதாக அவரது ஏஜண்ட் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயை வென்ற இலங்கைத் தமிழர்
இலங்கையில் பிறந்து, பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்துவந்தவர் ஜார்ஜ் அழகையா (67).
அழகையா, 2014ஆம் ஆண்டு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கீமோதெரபி சிகிச்சை, தனது கல்லீரலில் பெரும்பகுதி அகற்றப்பட்டது முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு 2015ஆம் திகதி மீண்டும் பணிக்குத் திரும்பினார் அழகையா.
ஆனால், 2017ஆம் ஆண்டு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் சிகிச்சைக்குப் பின் பணிக்குத் திரும்ப, மீண்டும் 2021ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
என் மனைவி ஒருநாள் தனியாக அமர்ந்து சாப்பிடும் நிலை வரலாம் என்று கூறிய அழகையா
லண்டனில் தனது மனைவி Francesஉடன் வாழ்ந்துவந்த அழகையா, கடைசி வரை அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டே வாழ்ந்துவிடவேண்டும் என்பது என் ஆசைகளில் ஒன்று கூறியிருந்தர்.
ஜன்னல் வழியாக, தோட்டத்திலுள்ள மேசையில் மேசை விரிப்பை விரிக்கும் என் மனைவியைப் பார்க்கும்போது, ஒரு நாள் அவள் மட்டும் அந்த மேசையின் முன் அமர்ந்து தனியாக உணவருந்தவேண்டியிருக்குமோ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
அமைதியாக பிரிந்த உயிர்
இந்நிலையில், இன்று, குடும்பத்தினர், அன்பிற்குரியவர்கள் சூழ, அழகையாவின் உயிர் அமைதியாகப் பிரிந்ததாக அவரது ஏஜண்ட் தெரிவித்துள்ளார்.
அழகையாவுக்கு பல்வேறு தரப்பிலுமிருந்து இரங்கல் செய்திகள் குவிகின்றன. 1989ஆம் ஆண்டி பிபிசியில் இணைந்த அழகையா, 2008ஆம் ஆண்டு Order of the British Empire என்னும் கௌரவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |