லண்டனில் வாள்வெட்டுக்கு இரையான இலங்கைத் தமிழ் இளைஞரின் பெயர் உள்ளிட்ட தகவல் வெளியானது
இந்த வார தொடக்கத்தில் தெற்கு லண்டன் ரயில் நிலையத்தில் கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தில் பலியானவரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ட்ராபெர்ரி ஹில் ரயில் நிலையத்தில்
தெற்கு லண்டனின் Twickenham பகுதியில் குடியிருக்கும் இலங்கைத் தமிழரான 21 வயது Anojan Gnaneswaran என்பவரே ஸ்ட்ராபெர்ரி ஹில் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவத்தில் பலியானவர்.
@google
ஜனவரி 8ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் 19 வயதுடைய இரு இளைஞருகளும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைதாகியுள்ளனர். மட்டுமின்றி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய ஒருவர், 20 வயதுடைய ஒருவர் மற்றும் 15 வயதுடைய ஒருவர் ஆகிய மூவரும் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 16 வயதுடைய ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மூத்த விசாரணை அதிகாரி பால் அட்வெல் தெரிவிக்கையில், ஞானேஸ்வரன் கொலை வழக்கில் தற்போது மூவரை கைது செய்துள்ளோம்.
நேரில் பார்க்க நேர்ந்த எவரேனும்
இந்த விசாரணைக்கு ஆதரவாக தகவல் அளித்த பொதுமக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Credit: David Nathan
மேலும், இச்சம்பவம் நடந்தபோது நேரில் பார்க்க நேர்ந்த எவரேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |