சாலையில் கிடந்த பணக்கட்டு., இலங்கை தமிழ்ப்பெண்ணின் செயலுக்கு காவல்துறை பாராட்டு

Police spokesman Refugee Sri Lanka Refugees Sri Lankan Tamils Money
By Ragavan Oct 30, 2022 10:20 AM GMT
Report

சாலையில் கிடந்த பார்சலில் 500 ரூபாய் பணக்கட்டு இலங்கை தமிழ்ப்பெண் கண்ணில் சிக்கியது.

அவரது நேர்மைக்காக காவல் துறையினர் சால்வை அணிவித்து பாராட்டை தெரிவித்தனர்.

தமிழகத்தில் சாலையில் கிடந்த பணக்கட்டை கண்டெடுத்த இலங்கைத் தமிழ்ப்பெண் அதனை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்ததற்காக காவல் துறையால் பாராட்டப்பட்டுள்ளார்.

ஈரோடு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சாலையில் சிக்கிய ரூ.40,000 பணத்தை, இலங்கைத் தமிழ்ப் பெண், வியாழக்கிழமை, அருகிலுள்ள காவல் நிலையத்தில் திருப்பி அளித்தார்.

சாலையில் கிடந்த பணக்கட்டு., இலங்கை தமிழ்ப்பெண்ணின் செயலுக்கு காவல்துறை பாராட்டு | Sri Lankan Tamil Refugee Return Money Found RoadTNIE

இதுகுறித்து பொலிஸார் கூறியதாவது: ஈரோடு பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள ராஜேஸ்வரி (55) என்பவர் பேருந்தில் சத்தியமங்கலம் சென்றார்.

சத்தியமங்கலம் வந்து பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது சாலையில் ஒரு பார்சல் கிடைத்தது. பார்சலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.500 ரூபாய் நோட்டுகளில் 40,000 ரூபாய் இருந்தது.

சாலையில் சந்தித்த தொட்டம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (21) என்பவரின் உதவியுடன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை இழந்தவர் காவல் நிலையம் வரலாம் என வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.

அதையடுத்து, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கடைக்காரர் குணசிங்கம் பொலிஸாரை தொடர்பு கொண்டு, அந்தப் பணம் அதே பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வரும் தனது நண்பர் ஜோஷ்வா (61) என்பவருக்குச் சொந்தமானது என்று கூறினார்.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோஷ்வா மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில், மருத்துவச் செலவுக்காக இவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

விசாரணைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை ஸ்டேஷனில் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி கூறினார்.

இதையடுத்து, ராஜேஸ்வரி மற்றும் கோகுல் இருவரையும் அவர்களின் நேர்மைக்காக பொலிஸார் பாராட்டினார்.  

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US