பிரான்ஸில் இலங்கை தமிழர் பொலிஸாரால் சுட்டுக் கொலை: புலம்பெயர் தமிழர்கள் அதிர்ச்சி
பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர், அந்நாட்டு பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் இலங்கையின் முல்லைத்தீவு, மல்லாவி பகுதியை சேர்ந்த 40 வயதான வைத்திலிங்கம் புவனேஸ்வரன் என்பவரை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பின்னணி காரணம் என்ன?
மன அழுத்தம் காரணமாக, அண்டை வீட்டார்களுடன் குழப்பம் விளைவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து வைத்திலிங்கம் புவனேஸ்வரன் மீது இரண்டு முறை துப்பாக்கியால் பொலிஸார் சுட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்துவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லாத நிலையில், பிரான்ஸ் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி இலங்கை நாட்டவரை கொன்று இருப்பது புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |