பிரித்தானியாவில் இருந்து அஜித் தந்த சர்ப்ரைஸ்! உடம்பு சிலிர்த்துவிட்டது... ஈழத்தமிழர் நெகிழ்ச்சி
லண்டனில் இருந்தபடி ஈழத்தமிழருக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்த நிலையில் அது குறித்து அந்த இளைஞர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு பைக் ரேசர் குழுவுடன் சேர்ந்து பைக்கில் லண்டனைச் சுற்றி வருகிறார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த லவன் என்ற ரசிகருக்கு அஜித் சமீபத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
அந்த ஓடியோவில், லவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய கூறிய அஜித், சந்தோசமா இருங்க, ஆரோக்கியமா இருங்க... நேரில் மீட் பண்ணுவோம் என கூறினார். இதையடுத்து நீங்க எப்படியிருக்கீங்க என ரசிகர் கேட்க, நான் நன்றாக இருக்கிறேன் என அஜித் சொன்னார். அதற்கு, நீங்கள் நன்றாக இருந்தால் எனக்கு போதும் என ரசிகர் நெகிழ்ச்சியுடன் சிரித்தபடி சொன்னார்.
Ajith sir wishing a fan birthday.
— Ajith (@ajithFC) June 29, 2022
| Video: lavan | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/lgn6slhxp3
இது குறித்து பேசிய லவன், நான் சின்ன வயசிலிருந்தே அஜித்தோட பயங்கரமான ரசிகன். இலங்கையில அஜித் சாரோட எல்லா படமும் வெளியாகிடும். அங்க 100 தியேட்டர் இருக்குன்னா, அதுல 98 தியேட்டர்ல அஜித் சார் படம்தான் ஓடும். நண்பர்களுடன் முதல் நாளே போய் பார்த்துடுவேன்.
அப்படித்தான், பிரித்தானியாவில் இருக்கும் நண்பரிடம் இருந்து போன் வந்தது. போனை எடுத்து பேசியபோது எதிர்முனையில் அஜித் சார். உடம்பெல்லாம் சிலிர்த்துக்கிச்சி.
வானத்துல பறக்கிற மாதிரி இருக்குன்னு சொல்வாங்கல்ல... அதை நிஜமாகவே அஜித் சார்கிட்ட பேசும்போது உணர்ந்தேன். எனக்கு அக்டோபர் 10 ஆம் திகதி தான் பிறந்தநாள். முன்கூட்டியே இப்படியொரு சர்ப்ரைஸ் வாழ்த்து கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.