கனடாவில் புலம்பெயர் சிறுவர்களுக்காக தன் சொந்தக் கதையை புத்தகமாக்கிய இலங்கை தமிழ்ப்பெண்: ஒரு சுவாரஸ்ய செய்தி

Canada Sri lankan
By Balamanuvelan Dec 23, 2021 01:15 PM GMT
Report

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.

கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் மீரா பாலாவுக்கு புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் படித்த புத்தகங்களில் இருந்த கதாபாத்திரங்கள் அவரைப் போல இல்லை. அத்துடன், கனடாவிலும் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட, பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட புத்தகங்கள் அதிகம் இல்லை.

ஆக, தன் கதையையே புத்தகமாக எழுதத் துவங்கினார் மீரா.

அதன் விளைவாக Palm Trees Under Snow என்ற புத்தகம் பிறந்தது. தான் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தபோது, தான் எதிர்கொண்ட போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த புத்தகத்தை எழுதியுள்ளார் மீரா.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது இலங்கையில் வாழ்ந்த மாயா என்ற சிறுமியைக் குறித்தது அந்த புத்தகம். பனை மரங்கள் சூழ்ந்த இடத்தில், கடல் காற்றை சுவாசித்து வளர்ந்த மாயா, தன் நாடு போரால் சின்னபின்னமாவதைக் கண்ணால் காண்கிறாள். அமைதியும் பாதுகாப்பும் நாடி கனடாவுக்கு புலம்பெயர்கிறது மாயாவின் குடும்பம்.

கனடாவில் புலம்பெயர் சிறுவர்களுக்காக தன் சொந்தக் கதையை புத்தகமாக்கிய இலங்கை தமிழ்ப்பெண்: ஒரு சுவாரஸ்ய செய்தி | Sri Lankan Tamil Woman An Interesting News

கனடாவுக்கு புலம்பெயரும் மாயாவுக்கு, அங்கும் சவால்கள் காத்திருக்கின்றன. மொழிப் பிரச்சினை பெரும் தடையாக, மாயாவை வம்புக்கிழுக்கிறார்கள் சக மாணவ மாணவிகள். அவளால் ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசும் சக மாணவ மாணவிகளுடன் உரையாட முடியவில்லை. யாரும் அவளுக்கு நண்பர்களாகவும் முன்வரவில்லை.

புத்தகத்தில் இது மாயாவின் கதையானாலும், உண்மையில் அது மீராவின் கதையாகும். 9 வயதாக இருக்கும்போது கனடாவுக்கு குடிபெயர்ந்த மீரா, தன்னை மற்ற மாணவ மாணவிகள் ஒதுக்கிவைப்பதையும் வம்புக்கிழுப்பதையும் அனுபவித்தவர். மீரா புலம்பெயர்ந்த 1980களில், ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தோர் கனடாவில் அதிகம் இல்லை. மீராவின் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் மீராவைப் பார்த்து, உன் நாட்டுக்குத் திரும்பிப்போ என்று கத்துவார்களாம். அப்போதெல்லாம், என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்பாராம் மீரா.

ஒரு முறை கண்ணீர் விட்டுக் கதறி, தன் பெற்றோரைப் பார்த்து, நம் நாட்டுக்குப் போவோம் வாருங்கள் என மீரா அழைக்க, இதுதான் நம் புதிய தாய்நாடு, நீ கஷ்டப்பட்டு உழைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிவிட்டிருக்கிறார்கள் அவர்கள். அதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளத் துவங்கிய மீரா, ஆங்கிலம் கற்பதன் மூலம் தைரியத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதற்குப் பின் மற்ற மாணவமாணவிகள், உன் நாட்டுக்கு திரும்பிப்போ என கத்தும்போது, நான் போகமாட்டேன், இதுதான் என் புது தாய்நாடு என்று தைரியமாக பதிலளித்திருக்கிறார் மீரா. தன்னிடம் கத்தியவர்களிடம் பதிலுக்கு ஆங்கிலத்தில் கத்தியபிறகுதான் நிமிர்ந்து நிற்பதாக முதன்முறையாக உணர்ந்துள்ளார் அவர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றும் மீரா, தான் அனுபவித்த அதே பிரச்சினைகளை இன்றும் அனுபவிக்கும் புலம்பெயர்ந்த சிறுவர் சிறுமியரை தினமும் காண்கிறார். என் வகுப்பில் ஏராளம் ஆசிய நாட்டவர்களான மாணவ மாணவிகள் இருக்கிறார்கள் என்று கூறும் மீரா, ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக எடுக்கும் மாணவ மாணவிகள் மற்றவர்களை விட குறைந்தவர்கள் என யாராவது கூறினால், நான் அவர்களுக்கு என்னுடைய கதையைக் கூறுகிறேன் என்கிறார்.

கனடாவில் புலம்பெயர் சிறுவர்களுக்காக தன் சொந்தக் கதையை புத்தகமாக்கிய இலங்கை தமிழ்ப்பெண்: ஒரு சுவாரஸ்ய செய்தி | Sri Lankan Tamil Woman An Interesting News

பாருங்கள், நான் கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஆங்கிலம் பேசக்கூடத் தெரியாது, ஆனால், இப்போது நான் ஒரு ஆசிரியையாக இருக்கிறேன், என்னைப்போலவே நீங்களும் சாதிக்க முடியும் என்று அவர் அந்த மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்துகிறார்

ஆசிய மற்றும் பிற சிறுபான்மை சமுதாயத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தகங்கள் பள்ளிகளில் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மீரா, பல்வேறு மொழி, கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட புத்தகங்களை இப்போது எழுதிவருகிறார்.

வித்தியாசமாக இருப்பது தவறல்ல, நாம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டு, அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்கிறார் மீரா.

படிக்கும்போது மனதை நெருடும் Palm Trees Under Snow என்ற அந்தப் புத்தகம், புலம்பெயர் சிறுவர்கள் தங்களை அப்புத்தகத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் பிள்ளைகளும், புலம்பெயர்தல் வாழ்க்கை குறித்து அறிந்துகொள்ள உதவியாக உள்ளது என்கிறார் உள்ளூர் பத்திரிகையாளரான Scarlett Liu என்பவர்.  


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US