பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்
லண்டனில், இலங்கைத் தமிழர் ஒருவரை நான்கு பேர் கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
ரயில் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட பொலிசார்
திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 8ஆம் திகதி, லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் ட்விக்கன்ஹாம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி ஹில் ரயில் நிலையத்துக்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு, இலங்கைத் தமிழரான 21 வயது இளைஞரை நான்கு பேர் கத்தியால் குத்தியுள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையிலும், அந்த இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவரைக் குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை என்றாலும், அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள காரைநகரைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நான்கு பேர் கைது
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் தெரியவந்தால் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |