மிரட்டிய பந்துவீச்சாளர்கள்! போராடி தோற்ற இலங்கை... இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்தது
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுபயணம் செய்துள்ள இலங்கை அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
அதன் பின்னர் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்றிரிவு கார்டீப், சோபியா கார்டியன்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்தது.
அதிகபடியாக குசல் மெண்டீஸ் 39 ஓட்டங்களையும், குசல் பெரேரா 21 ஒட்டங்களையும் பெற ஏனைய வீரர்கள் சொதப்பினர்.
Match won ✅ Series secured ✅
— England Cricket (@englandcricket) June 24, 2021
Scorecard/clips: https://t.co/pLmR4SdvUJ
??????? #ENGvSL ?? pic.twitter.com/nYQidBKsMV
பின்னர் 112 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்ப வீரராக களமிறங்கிய ஜோனி பெயர்னஸ்டோ பினுர பெர்னாண்டோவின் இரண்டாவது பந்து வீச்சில் எதுவித டக் அவுட் ஆனார்.
அவரையடுத்து ஆடுகளம் நுழைந்த டேவிட் மலனும் நான்கு ரன்னுடன் துஷ்மந்த சமாரவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்.யூ ஆனார்.
இதனால் இங்கிலாந்து 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இலங்கையின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் இங்கிலத்துக்கு மிரட்டல் விடுத்தனர்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 5.2 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்களை மாத்திரம் பெற்றிருந்தது.
England take an unassailable 2-0 lead in the 3-match series.#ENGvSL pic.twitter.com/FJ9hN8Vy4r
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) June 24, 2021
அதன் பின்னர் மழையின் ஆட்டம் ஆரம்பிக்க, போட்டி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டபோது டக்வெத் லூவிஸ் முறைப்படி இங்கிலாந்தின் வெற்றிக்காக 18 ஓவர்களுக்கு 103 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக சாம் பில்லிங்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் களமிறங்கி விக்கெட்டினை பறிகொடுக்காது ஓட்ட இலக்கை நோக்கி கவனம் செலுத்தினர்.
14 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து அணி 86 ரன்களை பெற்ற வேளையில், 15 ஆவது ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் சாம் பில்லிங்ஸ் 24 ரன்களுடன் ஹசரங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சாம் குர்ரன் களமிறங்கி துடுப்பெடுத்தாட, இங்கிலாந்து 16.1 ஓவர்கள் நிறைவில் 108 ரன்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இங்கிலாந்து 2:0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.
There you have it, @englandcricket have won by five wickets and taken the series win! ?
— ICC (@ICC) June 24, 2021
A solid effort by the @OfficialSLC bowlers. A dream start for the young team but it wasn't quite enough to stop the English side.#ENGvSL | https://t.co/slrIAyhMgu pic.twitter.com/ukMkrvYonP