திடீரென இந்தியாவில் தரையிறங்கிய கிரிக்கெட் வீரர்கள் பயணித்த விமானம்.. நடுவானில் என்ன நடந்தது? உண்மையை வெளிப்படுத்திய தலைமை பயிற்சியாளர்
இங்கிலாந்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் இந்தியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணத்தை தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் படுதோல்வியடைந்தது.
அதுமட்டுமின்றி, 3 வீரர்கள் பயோ பபுள் விதிகளை மீறி வெளியே சுற்றிதிரிந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நாடு திரும்ப இலங்கை வீரர்கள் பயணித்த விமானம் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சம்பவம் குறித்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது, இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பும் போது, விமானத்தில் எரிபொருள் கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, விமானம் அவசரமாக இந்தியாவில் தரையிறங்க வேண்டியிருந்தது.
இந்த முழு நிகழ்வும் வீரர்களிடையெ பீதியை ஏற்படுத்தியது என ஆர்தர் விவரித்தார்.