2 நாட்களாக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி இலங்கைப் பெண்னுக்கு திடீர் பிரசவம்!
இலங்கையில் 2 நாட்களாக கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணிப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை விட்டு வெளியேற கடவுச்சீட்டைப் பெறுவதற்காக இரண்டு நாட்களாக வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி இலங்கைப் பெண், இன்று (வியாழக்கிழமை) தனது முறைக்காக காத்திருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் இன்று காலை பிரசவ வலியில் இருந்த 26 வயதுடைய பெண்ணை அவதானித்து, Castle வைத்தியசாலைக்கு கொண்டு சென்று குழந்தையை பிரசவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய மலையகத்தைச் சேர்ந்த குறித்த பெண் தனது கணவருடன் கடந்த இரண்டு நாட்களாக வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக கடவுச்சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்தார்.
ஜனவரி பிற்பகுதியில் பொருளாதார நெருக்கடி தொடங்கியதால், இலங்கை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற நீண்ட வரிசையில் காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் 'ஒரு நாள் வழங்கல் சேவையில்' (one day issue service) பாஸ்போர்ட் பெற விரும்புகின்றனர்.
இதற்கிடையில், எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றொரு நபர் இன்று காலை மாரடைப்பால் இறந்தார், இது மார்ச் மாதத்தில் இருந்து எரிபொருள் வரிசையில் நடந்த பதினைந்தாவது மரணம்.