லண்டனில் 26 வயது இலங்கை பெண்ணிற்கு நடந்த ஆச்சரியம்! கனவுல கூட நினைச்சு பார்க்கல என மகிழ்ச்சி
லண்டனில் வசிக்கும் இலங்கை பெண் தெற்காசிய உடைகளை சாதாரணமாக விற்க தொடங்கி தற்போது உலக புகழ்பெற்ற ASOS ஷாப்பிங் தளத்துடன் ஒப்பந்தம் செய்து விற்பனை செய்யும் அளவுக்கு மிகப்பெரிய அளவுக்கு முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
கன்யா லண்டன் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவர் சஹானி குணசேகரா (26). இவர் தான் படித்த பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட விற்பனையகத்தின் மூலம் தெற்காசிய ஆடைகளை 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை விற்பனை செய்தார்.
ஆனால் அப்போது புகழ்பெற்ற ASOS தளத்தில் தனது பிராண்ட் ஆடைகள் பிற்காலத்தில் விற்பனைக்கு வரும் என கனவிலும் சஹானி நினைத்திருக்க மாட்டார். ஆனால் அது தற்போது நடந்துள்ளது.
அதன்படி இணையதளத்தில் தனக்கென சொந்த ஆடை வரிசை இருப்பதாக இந்த பிரித்தானிய - இலங்கை தொழிலதிபர் கூறுகிறார். சஹானி கூறுகையில், கன்யா லண்டன் ASOS இல் இடம்பெறும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
mylondon
நான் ஒரு இலங்கை குடும்பத்தில் பிறந்தேன், எனது பெற்றோர் இருவரும் இலங்கையர்கள். என் அம்மா எப்போதும் தனது சொந்த ஆடைகளை தானே உருவாக்குவார். நிறைய தெற்காசிய தாய்மார்கள் தையல் துணி தைப்பதை ரசித்து பார்த்துள்ளேன்.
அது தான் என் மனதுக்குள் இந்த ஆடைகள் மற்றும் பேஷன் துறையை தேர்ந்தெடுக்க தூண்டியது. என் பெற்றோர் பிரித்தானியா வருவதற்கு நிறைய தியாகங்களை செய்தனர். அதனால் ஃபேஷனில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தேன்.
ஒரு புலம்பெயர்ந்தவராக எப்போதும் இங்கு முதலில் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம். அதன்படி பட்டப்படிப்பை முடித்தவுடன் எதாவது சொந்தமாக செய்து அதன்மூலம் குடும்பத்துக்கு பெருமை தேடி தர வேண்டும் என எண்ணினேன்.
mylondon
2019 இல் கன்யா லண்டனை தொடங்கினேன். ஒருநாள் ASOS நிறுவனம் என்னை அணுகியது, அவர்கள் எனது தயாரிப்புகள் மற்றும் அதன் தரத்தை விரும்பினர்.
இளம் தெற்காசிய பெண்களுக்கு நான் சொல்ல வருவது என்னவென்றால், எதை செய்யவும் நீங்கள் பயப்படக்கூடாது. மக்கள் கலாச்சாரத்தைத் தழுவத் தயாராக உள்ளனர், எனவே தெற்காசிய உடைகள் மிகவும் முக்கியமானவையாக உள்ளது என கூறியுள்ளார்.
mylondon