காமன்வெல்த் கிரிக்கெட்டில் மிரட்டிய இலங்கை பெண்சிங்கங்கள்!
காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வீராங்கனைகள் நியூசிலாந்துக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டினர்.
பெர்மிங்காமில் இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம் செய்தது.
தொடக்க வீராங்கனைகள் சோஃபி டிவைன் 24 ஓட்டங்களும், பேட்ஸ் 34 ஓட்டங்களும் விளாசினர். அவர்களது விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீராங்கனைகள் ஒஷதி ரணசிங்கே, இனோக ரணவீரா இருவரும் நியூசிலாந்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி நியூசிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
PC: Twitter (@ICC)
எனினும் இறுதியில் தஹூஹூ 8 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாசி 20 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
PC: Twitter (@ICC)
இலங்கை தரப்பில் இனோக ரணவீரா 3 விக்கெட்டுகளையும், ஒஷதி ரணசிங்கே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இலங்கை அணியில் வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
நிலக்ஷி டி சில்வா மட்டும் ஒருபுறம் போராட, ஏனைய வீராங்கனைகள் ஓட்டங்கள் எடுக்க தவறியதால் இலங்கை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நிலக்ஷி டி சில்வா 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணி தரப்பில் ஹயலே ஜென்சென் 3 விக்கெட்டுகளையும், கார்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். காமன்வெல்த் தொடரில் இலங்கை அணி தனது அடுத்த போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 4ஆம் திகதி சந்திக்கிறது.
PC: Twitter (@ICC)