கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் இலங்கையர்: விவரம் செய்திக்குள்
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் துன்புறுத்தப்படலாம் என்ற நிலையிலிருக்கும் இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்படும் அபாய நிலைக்குள்ளாகியிருக்கிறார்.
Geevan Nagendran (42) தன்னுடன் சிறையிலடைக்கப்பட்டுள்ள சக கைதி ஒருவரை சிறைக்காவலர்கள் தாக்கும்போது, அவர்களைத் தடுப்பவர்களுக்கு உதவியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால், Nagendran தான் இளைஞனாக இருந்தபோது, தான் விட்டுவந்த இலங்கைக்கே நாடுகடத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Nagendran, தனக்கு 13 வயது இருக்கும்போது 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பி கனடாவுக்கு வந்தவர் ஆவார்.
கடந்த வியாழனன்று, Nova Scotia உச்ச நீதிமன்றம் Nagendranக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், அவர் ஏற்கனவே அதிக காலம் சிறையிலிருந்துவிட்டார்.
ஆனாலும், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
கனடாவுக்கு அகதியாக வந்த Nagendranஆல் மற்றவர்களுக்கு அபாயம் உள்ளதா, அவர் நாடுகடத்தப்படவேண்டுமா என்பதை புலம்பெயர்தல் அதிகாரிகள் தீர்மானிக்கும் வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு, டிசம்பர் 2ஆம் திகதி, Nova Scotiaவிலுள்ள சிறை ஒன்றில் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 15 கைதிகள் Stephen Anderson என்ற கைதி மீது தாக்குதல் நடத்தினார்கள். அந்த சம்பவத்தில் Nagendranம் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Nagendran தாக்குதல் நடத்தவில்லை என்றாலும், அவரும் மற்ற கைதிகள் சிலரும் சேர்ந்து Stephen Andersonஐக் காப்பாற்ற வந்த சிறைக்காவலர்களைத் தடுத்ததால், சட்டம் தன் கடமையைச் செய்ய அவர் தடையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.