இலங்கையர்கள் 10,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய பணத்தை வைத்துக்கொள்ள இந்தியா அனுமதி!
இலங்கையில் இந்திய ரூபாய் சட்டப்பூர்வமாக செல்லாது என்றாலும், இலங்கையர்கள் 10,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய ரூபாயை (INR) ரொக்கமாக வைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, அதிலிருந்து மீள இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ள முன்வந்தது.
அதையடுத்து, இந்திய ரூபாயை (INR) வெளிநாட்டு நாணயமாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்தது.
ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டாலர் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும், இலங்கை மக்கள் 10,000 அமெர்க்க டொலர் (ரூ.8 லட்சத்து 13 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம்.
இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
இதை செயல்படுத்த, இலங்கை வங்கிகள் இந்திய வங்கியுடன் "INR நாஸ்ட்ரோ கணக்குகளை" திறக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.