கனடாவில் சாலை விபத்தில் சிக்கிய இலங்கை தமிழருக்கு நேர்ந்த பரிதாபம்
இலங்கையில் பிறந்து கனடாவில் வளர்ந்த ஒருவர், சாலை விபத்தொன்றில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
நேற்று முன் தினம், மாலை, Ottawa நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் சிக்கினார்.
இரவு 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த நபர் பொலிஸ் துறையில் பணி செய்பவர் என்பது தெரியவந்தது.
விஜய் என்று அழைக்கப்படும் Vijayarani Mathiyalaghan (28) என்னும் அந்த இளைஞர், இலங்கையில் பிறந்தவர். Ottawaவில் வளர்ந்த விஜய், குடும்பத்தின் கடைசி மகனாம்.
Ottawa பொலிஸ் துறையில் சேரும் முன் கனேடிய இராணுவத்தில் பணியாற்றியுள்ள விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் பொலிஸ் துறையில் இணைந்தாராம்.
விஜயை இழந்து அவரது குடும்பத்தார் துக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், Ottawa பொலிஸ் கூட்டமைப்பின் தலைவரான Brian Samuel, தங்கள் பொலிஸ் குடும்பம் ஒரு சகோதரனை இழந்துவிட்டதாகவும், தங்கள் நண்பனுக்காக துக்கம் அனுஷ்டிப்பதாகவும், தன் பணியின் ஆரம்பகட்டத்திலேயே மரணித்துவிட்ட விஜய் உயிருடன் இருந்திருந்தால், அவர் சமுதாயத்துக்கும் பொலிஸ் துறைக்கும் என்னென்னவோ பங்களிப்புக்களைச் செய்திருப்பார் என்றும் கூறி தன் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022