இன்னமும் என்னை ஒரு கொழும்புச் சிறுவனாகத்தான் பாவிக்கிறேன்... வெளிநாடு ஒன்றில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் இலங்கையரின் அனுபவம்
ஓமானில் வாழும் ஆன்செலம் பெரைரா (Anselm Pereira)வின் மனைவியும் பிள்ளைகளும், இலங்கை கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்.
பிள்ளைகள் கனடாவில் குடியமர, பெரைராவும் அவரது மனைவியும் ஓமான் நாட்டில் வாழ்கிறார்கள்.
இலங்கையில் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த நேரத்தில், 1975ஆம் ஆண்டு, வாழ்வில் பெரிய இலக்குகள் வைத்திருந்த இளம் பட்டதாரியான பெரைரா, ஓமானில் வங்கி ஒன்றில் வேலை ஒன்று காலியாக இருப்பது குறித்துக் கேள்விப்பட்டார்.
அங்கு வேலைக்குச் சென்றால், அந்த வருமானம் ஒரு குடும்பத்தைத் துவக்குவதற்கும், தன் உறவினர்களுக்கு உதவுவதற்கும் உதவியாக இருக்கும் என முடிவு செய்தார் அவர்.
இன்று, நீண்ட காலம் ஓமானில் வாழ்ந்துவரும் ஒரு வெளிநாட்டவர்களில் ஒருவராக விளங்குகிறார் பெரைரா. வங்கிப்பணியிலிருந்து 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பெரைரா, தனது சொந்த நிறுவனம் ஒன்றில் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பு வகிக்கிறார்.
அம்மானில் கால்வைத்தபோது, இலங்கையிலிருந்து வேறுபட்டு விளங்கிய, அங்குள்ள மக்களின் அன்பும், அங்கு நிலவிய வெளிப்படையான பொருளாதாரச் சூழலும் அவரை வெகுவாக கவர்ந்துள்ளன.
பெரைராவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இலங்கை கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள். பிள்ளைகள் கனடாவில் குடியமர்ந்துவிட, பெரைராவும் அவரது மனைவியும், மீதமுள்ள ஆயுட்காலத்தை குடும்பம் வளருவதையும் முன்னேறுவதையும் பார்த்தபடி செலவிட விரும்புகிறார்கள்.
தான் ஓமானுக்கு வந்து எவ்வளவு காலமாகியிருந்தாலும், இன்னமும் கொழும்புவில் உள்ள தெகிவளையில் தான் பிறந்த வீட்டை நினைவுகூர்கிறார் பெரைரா. அந்த வீட்டை விற்றுவிட்டார்களாம். அவருக்கு இப்போது இன்னொரு இடத்தில் ஒரு வீட்டு மனை இருந்தாலும், ’என்னை கொழும்புவைச் சேர்ந்த ஒரு பையனாகத்தான் பார்க்கிறேன்’ என்கிறார் அவர். நீங்கள் வாழ்வில் எவ்வளவு உயரத்துக்கு வந்திருந்தாலும் சரி, எவ்வளவு சாதித்திருந்தாலும் சரி, நாம் இளம்பருவத்தில் நடந்து திரிந்த தெருக்கள், நாம் பிறந்த இடம் போன்ற விடயங்கள் இன்னமும் நம்மை ஈர்க்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், நாம் பிறந்தபோது, நம்மை உலகுக்கு அறிமுகம் செய்த இடம் அதுதானே, ஆகவே அது வாழ்வில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் பெரைரா.
எனக்கு ஓமானைப் பிடிக்கும், அங்குதான் என் பிள்ளைகள் பிறந்தார்கள் என்பதால் அது எனக்கு சொந்த வீடு. விடயம் என்னவென்றால், நான் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன் என்றாலும், அதற்கான தொழில் வாய்ப்பை சாத்தியமாக்கியது ஓமான்தான் என்கிறார் பெரைரா.
தனது, அதாவது இலங்கை சமூகத்துக்காக அவர் செய்தவற்றில், மஸ்கட்டிலுள்ள இலங்கை பள்ளியை தான் நிறுவியவர்களில் தானும் ஒருவன் என்பதையும், இலங்கை சமூக சங்கத்தை (Sri Lankan Social Club) உருவாக்கியதையும் பெருமையாக கருதுகிறார் அவர்.
நான் ஓமான் வந்த ஆரம்ப காலத்திலேயே, ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகத்தில் பணியாற்றிவந்தேன். ஓமானில் Mysoor என்று அழைக்கப்படும் புளி வாழைப்பழங்களையும் (Ambul bananas), King Coconut எனப்படும் இளநீர் வகையையும் முதலில் ஓமானுக்கு கொண்டு வந்தவன் நான்தான் என்கிறார் பெரைரா பெருமையாக...