சர்வதேச அளவில் தேடப்படும் நபருக்கு உதவிய இலங்கையர்கள்: தற்போது அவர்கள் நிலை என்ன தெரியுமா?
சர்வதேச அளவில் தேடப்படும் நபர் ஒருவருக்கு உதவியதற்காக இலங்கையர்கள் உட்பட அகதிகள் சிலரும், அவர்களது வழக்கறிஞர் ஒருவரும் துன்புறுத்தப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.
அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டதற்காக சர்வதேச அளவில் தேடப்பட்ட Edward Snowden என்னும் அமெரிக்கருக்கு அடைக்கலம் கொடுத்த சில அகதிகளும், அவர்களது சட்டத்தரணியான மொன்றியலைச் சேர்ந்த Robert Tibbo என்பவரும், ஹொங்ஹொங் அதிகாரிகளால் சொல்லொணா தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
மனித உரிமைகள் வழக்கறிஞரான Robert, Edward Snowdenக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்த போது, அவரை யாரும் கண்டுபிடிக்க இயலாத ஒரு இடத்தில் அவரை மறைத்துவைக்க முடிவு செய்தார்.
அது உலகின் பணக்கார நகரமான ஹாங்காங்கின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் வாழும் பகுதி. அங்குதான் பிலிப்பைன்சைச் சேர்ந்த அகதிக் குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசித்து வந்தனர்.
Vanessa Mae Rodel, Supun Thilina Kellapatha, Nadeeka Nonis மற்றும் Ajith Pushpa Kumara என்னும் அகதிகளின் உதவியை, அவர்களது வழக்கறிஞரான Robert நாடியபோது, அவர்கள் தங்களைப் போலவே இன்னொரு நாட்டில் சிக்கித் தவிக்கும் ஒரு நபராக கருதி Snowdenக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தனர்.
ஆனால் அது அவர்களுக்கு பெரும் சிக்கலாக முடிந்தது.
Snowdenக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவர்களை விசாரித்த ஹாங்காங் அதிகாரிகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறிய உதவித் தொகையையும் நிறுத்தினர். அதன்பின் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய மறுத்ததோடு, அகதிகள் துன்புறுத்தப்பட்டனர், அவமானப்படுத்தப்பட்டனர். உடனடியாக அவர்களது புகலிடக் கோரிக்கைகள் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. அவர்களுக்கு வேலை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது.
எப்படியாவது அவர்களை ஹொங்ஹொங்கிலிருந்து மீட்டுவிடவேண்டும் என Robert எடுத்த முயற்சியின்பேரில், அவர்கள் அனைவரும் கனடாவின் உதவியை நாடினார்கள்.
அவர்களில் Supun Thilina Kellapatha குடும்பத்திற்கு கடந்த செப்டம்பரில் கனடா புகலிடம் வழங்கியது.
தற்போது, மொன்றியலில் வாழ்கிறது Kellapatha குடும்பம். அவர்களுக்கு Samya Lemrini என்னும் புலம்பெயர்தல் சட்டத்தரணி ஸ்பான்சர் செய்துள்ளார்.
Kellapatha குடும்பம் கனடாவில் குடியமர்ந்துவிட்டாலும், அவர்கள் தங்களுக்கொரு நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.
Kellapathaவின் மனைவியான Nadeeka Dilrukshi Nonis, ஹொங்ஹொங்கில் இருந்தபோது எங்களால் வேலைக்கு செல்ல இயலவில்லை. அதனால் நாங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக எதையும் சேமிக்க முடியவில்லை. ஆகவே, எப்படியாவது ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவேண்டும் என்கிறார்.
தம்பதியரின் பிள்ளைகளான Sethumdi (10)ம், Dinath (5)ம் கவலைகளை எல்லாம் மறந்து சந்தோஷமாக பனியில் விளையாடுகிறார்கள். பிரெஞ்சு மொழியை ஆர்வமாகக் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள், எப்போதும் Samya அத்தையுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள்.
Samya காட்டிய பரிவும் பாசமும் பிள்ளைகளை வெகுவாகக் கவர்ந்துவிட, தாங்கள் இருவருமே வளர்ந்ததும் அவரைப் போலவே சட்டத்தரணிகளாக ஆக விரும்புவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.
கனடா வந்ததுமே சும்மா சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருக்க விரும்பாமல், உடனடியாக ஆப்பிள் பறிக்கும் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறது Kellapatha குடும்பம்.