சிங்கப்பூரில் இருந்து வெளியேறி... மற்றொரு ஆசிய நாட்டிற்கு செல்லும் கோட்டாபய ராஜபக்ச!
- ஜுலை 14ம் திகதி சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி
- தாய்லாந்தில் தற்காலிக தங்குமிடம் கோரி வியாழன்கிழமை பயணம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்காலிக தங்குமிடம் கோரி தாய்லாந்திற்கு வியாழன்கிழமை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நாட்டில் அமைதியின்மை மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் போராட்டம் வெடித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் அரசு அலுவலகங்கள் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவு வழியாக கடந்த ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.
கூடுதல் செய்திகளுக்கு: திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சவுதி அரேபிய தூதர்: பரபரப்பு காட்சிகள்!
இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்ட பையா ராஜபக்ச தற்காலிக தங்குமிடம் கோரி ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்திற்கு வரும் வியாழன்கிழமை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.