மரணப்படுக்கையில் காதலி... இறுதி ஆசையை நிறைவேற்றிய கமல்ஹாசன்!
கமல் கண்முன்னே தனது காதலியான ஸ்ரீவித்யாவின் உயிர் பிறந்ததை குறித்து சமீபத்தில் செய்யாறு பாலு பேட்டியளித்தார்.
அவர், ஸ்ரீவித்யா கமல்ஹாசனை நேசித்தார், இருவரையும் பற்றி ஊடகங்கள் பேசும்போது அதற்கு மறுப்பாக ஸ்ரீவித்யா ஏதும் பேசவில்லை.
கமலுடன் பல படங்கள் நடித்த பிறகு ஸ்ரீவித்யா கமல் மீது காதலில் விழுந்தார். இது ஒருதலை காதல் தான்.
ஆனால் கமலுக்கு சினிமாவில் தான் அதிகம் ஆர்வம் என்று ஸ்ரீவித்யாவிடம் அடிக்கடி கூறியிருக்கிறார்.
ஸ்ரீவித்யா கணவர் ஜார்ஜ் உடன் விவாகரத்து பெற்ற பிறகு, கடனில் இருந்த ஸ்ரீவித்யாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.
புற்றுநோய் காரணமாக அவர் சென்னையை விட்டு கேரளாவிற்கு சென்றுவிட்டார். ஸ்ரீவித்யா எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, அவரும் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.
அவர் மரணத்தை நெருங்கியபோதுதான் கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
அவரின் ஆசையை அறிந்த கமல் அவரை பார்க்க ஓடி வந்தார். கமல்ஹாசனை தவிர வேற யாரையும் ஸ்ரீவித்யா அறையின் உள்ளே அனுமதிக்கவில்லை.
ஸ்ரீவித்யாவை பார்க்க வந்த கமல் அவற்றின் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் ஸ்ரீவித்யா உடல்நலக்குறைவால் தலை முடிகள் கொட்டி, உடல் மெலிந்து மோசமான நிலையில் காணப்பட்டார்.
கமலை பார்த்த உடனே ஸ்ரீவித்யா உயிரை விட்டார். கமல், ஸ்ரீவித்யாவின் மரணத்தை கண்டு கதறி அழுதார்.
மரணத்தை நெருங்கியபோது, ஸ்ரீவித்யா பேசிய ஒரே பெயர் தன்னுடையது என்று கூறி அழுதார் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |