நடுத்தர குடும்பத்தில் பிறந்து பல கோடிகளுக்கு அதிபதியான தமிழர்
ஸ்ரீதர் வேம்பு! தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் இன்று மிகப்பெரிய கோடீஸ்வர தொழிலதிபர்.
இவர் தான் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporationன் நிறுவனர். 1989 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் படிப்பை ஸ்ரீதர் வேம்பு முடித்தார்.
பின்னர், 1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் [Qualcomm ] சேர்ந்தார். அங்கிருந்த போது . குறிப்பாக, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.
கடந்த 1996ல் நெட்ஒர்க் மேனேஜ்மெண்ட் துறையில் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த டோனி தாமஸ் என்பவருடன் இணைந்து சென்னையில் சிறிய அபார்ட்மெண்டில் Vembu Software நிறுவனத்தை ஸ்ரீதர் துவங்கி தொழிலில் முழுவதுமாக கவனம் செலுத்தி கடுமையாக உழைத்தார். ஸ்ரீதர் வேம்புவின் மனைவி வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார்.
பின்னாளில் தான் இந்த நிறுவனத்தின் பெயர் Zoho Corporation-ஆக மாறியது. நிறுவனம் துவங்கப்பட்டபோது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மனாக டோனி தான் இருந்தார்.
ஸ்ரீதர் வேம்பு நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் ஈடுபட்டு இருந்தார். இவர்களது மென்பொருளுக்கு அந்த நேரத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. 2000 ஆண்டு வாக்கில் இந்தியாவில் 115 பொறியாளர்கள், அமெரிக்காவில் 7 பொறியாளர்கள் என வளர்ந்தது நிறுவனம். மேலும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை நடைபெற்றது.
2001 ஆம் ஆண்டு மிகப்பெரிய சறுக்கல் சந்தையில் நடைபெற்றது. அப்போது நெட்வொர்க்கிங் துறையில் ஈடுபட்டிருந்த பல நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன. இதனால் 150 வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில் 2002 இல் வெறும் 3 வாடிக்கையாளர்கள் என்ற நிலைக்கு வந்தது. பலர் இந்த தாக்கத்தில் காணாமல் போயினர் ஆனால் ஸ்ரீதர் வேம்பு இதனையும் சாதகமாக பார்த்தார். ஒரே மாதிரியான தயாரிப்புகளை மேற்கொண்டால் இதுபோன்ற இழப்புகள் பெரிதும் பாதிக்கும் என்பதை இதன் மூலமாக உணர்ந்துகொண்டார்.
இந்த படிப்பினையை அடுத்து பல துறைகளில் அவர் அக்கறை செலுத்த விரும்பினார். அடுத்த சில ஆண்டுகளில் டோனி வேறு நிறுவனம் துவங்குவதற்காக வெளியில் செல்ல நிறுவனத்தின் கட்டுப்பாடு அனைத்தும் ஸ்ரீதர் வேம்புவிடம் வந்தது.
அவர் பல மாற்றங்களை செய்து நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு வந்தார். 2009 இல் தான் Zoho Corporation என்ற பெயர் நிறுவனத்திற்கு சூட்டப்பட்டது. இந்த நிறுவனம் மூன்று முக்கிய பகுதிகளில் அக்கறை செலுத்துகிறது. Zoho.com, WebNMS and Manage Engine. சிறப்பான மென்பொருள்களை வழங்குவதனால் பல்வேறு நாடுகளிலும் வரவேற்பு அதிகரித்தது.
Zoho Corporation பல்வேறு பெரிய ஜாம்பவான்களுக்கு போட்டியாக களத்தில் நிற்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு $3.75 பில்லியன் ஆகும்.