லண்டனில் அதிக சம்பளத்தில் வேலையை உதறியவர்... இன்று 53,000 கோடி நிறுவனத்தின் தலைவர்
இந்தியாவில் நகர மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இணைந்துள்ள நிறுவனம் ஸ்விக்கி. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரே ஸ்ரீஹர்ஷ மேஜட்டி. இவரே தற்போது அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியகவும் செயல்பட்டு வருகிறார்.
தொழில்முனைவோர் குடும்ப பின்னணி
ஸ்ரீஹர்ஷ மேஜட்டி ஒரு தொழில்முனைவோர் குடும்ப பின்னணி கொண்டவர் தான். தாயார் மருத்துவராக பணியாற்றி வந்த போது, இவரது தந்தை உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள BITS கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள IIM-ல் இணைந்துள்ளார். லண்டனில் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீஹர்ஷ, ஒரே ஆண்டில் அந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியா திரும்பினார்.
பயணங்களை விரும்பும் ஸ்ரீஹர்ஷ பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சைக்கிளில் 3,000 கி.மீ.க்கு மேல் பயணம் செய்துள்ளார்.
சொத்து மதிப்பு 14,000 கோடி
2013ல் Bundl என்ற நிறுவனத்தை இன்னும் இருவருடன் இணைந்து உருவாக்கிய ஸ்ரீஹர்ஷ, அந்த நிறுவனத்தையே பின்னர் ஸ்விக்கி என உருமாற்றம் செய்துள்ளனர். குறுகிய காலத்தில் ஸ்விக்கி நாட்டிலேயே மிகப்பெரிய ஒன்லைன் உணவு ஆர்டர் செய்யும் சேவையாக மாறியது.
தற்போது ஸ்விக்கி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 53,000 கோடி (6.5 பில்லியன் டொலர்) 2023ல் ஸ்ரீஹர்ஷ மேஜட்டியின் சொத்து மதிப்பு தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 2020ல் அவரது சொத்து மதிப்பு 14,000 கோடி என கூறப்பட்டது. 2019ல் அவரது சம்பளம் மட்டும் ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |