ஒரு அற்புதமான வீரரை இப்படியா பயன்படுத்துவது? ரோகித் சர்மாவை விளாசும் முன்னாள் தமிழக வீரர்!
சூர்யகுமார் யாதவை தொடக்க வீரராக களமிறக்குவது குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது துடுப்பாட்ட வீரர்கள் வரிசை மாற்றி களமிறக்கப்படுகின்றனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்து வரும் டி20 தொடரில் middle order வீரரான சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். ஆனால் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
தொடக்க வீரராக களமிறங்கி ஓட்டங்கள் எடுக்க அவர் சிரமப்படுவது கண்கூடாக தெரிகிறது. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த முடிவு தான் கண்டனங்களை பெற்றுள்ளது.
fairplaynews
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஸ்ரீகாந்த், கேப்டன் ரோகித் சர்மாவை விளாசியுள்ளார். அவர் கூறுகையில், 'சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் உள்ள அற்புதமான வீரர். டி20 உலகக் கோப்பையில் அவர் 4வது இடத்தில் துடுப்பாட்டம் செய்ய வேண்டும்.
பிறகு ஏன் அவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும்? அப்படி யாரையாவது தொடக்க வீரராக்க விரும்பினால் ஷ்ரேயாஸ் ஐயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக இஷான் கிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
deccanherald (File Photo)
நான் கூற வருவது எளிமையானது. சூர்யகுமார் யாதவ் போன்ற கிரிக்கெட் வீரரை கெடுக்காதீர்கள். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள். ஓரிரு தோல்விகளுக்குப் பிறகு அவர் தன்னம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். கிரிக்கெட் ஒரு நம்பிக்கை விளையாட்டு' என தெரிவித்துள்ளார்.
PC: BCCI