போதைப்பொருள் வழக்கு.., நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து பொலிஸார் அதிர்ச்சி தகவல்
நடிகர் ஸ்ரீகாந்த் 2023ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீகாந்த் கைது
கோகைன் வகை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதில், நடிகர் ஸ்ரீகாந்தின் வீட்டில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர் ஒரு கிராம் போதைப்பொருள் மற்றும் கவர்களைப் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட்டார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் வழக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
வெளியான தகவல்
இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு மேலும் 10 வழக்குகள் போடப்பட்டு நிறைய பேர் போதைப்பொருள் வழக்கில் கைதாகினர்.
இதுவரை 27 குற்றவாளிகளை பிடித்திருக்கிறோம். போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை தொடரும் என்று காவல் ஆணையர் அருண் கூறினார்.
மேலும், 2023ஆம் ஆண்டு முதலே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்தது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |