வருகிறது காற்றாலை மின் திட்டம்! இலங்கையில் 442 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் அதானி குழுமம்
அதானி குழுமத்தின் எரிசக்தி பிரிவான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், 442மில்லியன் டாலர் முதலீட்டில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க இலங்கையின் முதலீட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
பங்குச் சந்தையில் வீழ்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாகச் சரிவடைந்தது. இதனால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அதானி குழும நிறுவனங்கள் கணக்கு மோசடி செய்கிறதை எனக் குற்றம் சாட்டியதை தொடர்ந்து பங்குச் சந்தை முதலீட்டில் $120 பில்லியன் நஷ்டமானது. ஆனால் இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுக்கிறது.
அதானியின் கிரீன் எனர்ஜி
இந்த நிலையில் அதானி குழுமம் 442 மில்லியன் டாலர் காற்றாலை மின் திட்டத்தை இலங்கையில் துவங்க ஒப்புதல் அளித்துள்ளது.பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை அதானி குழுமத்தின் முதலீட்டைக் கடந்த வியாழன் அன்று அறிவித்தது.
@siasat
கௌதம் அதானியின் நிறுவனங்களின் ஒரு பகுதியான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கை தீவின் வடக்கில் இரண்டு காற்றாலைகளை அமைக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வந்த அதானி
காற்றாலை திட்டத்தை உறுதி செய்வதற்காக அதானி கடந்த 22ஆம் திகதி இலங்கை அரசின் அதிகாரிகளைக் கொழும்பில் சந்தித்ததாக எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரா கூறியுள்ளார்.
மேலும் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.