சொற்ப ரன்களுக்கு இந்தியாவிடம் சுருண்டது இலங்கை! பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.
இதனையடுத்து 2 போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்டில் அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, மார்ச் 12ம் திகதி பெங்களூரு மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டி டிராவில் முடிந்தால் இந்திய அணி தொடரை கைப்பற்றும், இலங்கை அணி வெற்றிப்பெற்றால் 1-1 என்ற வெற்றிக்கணக்கில் தொடர் சமனில் முடியும்.
டெஸ்ட் தொடரை வெல்ல இலங்கை அணிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், 2வது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருகின்றனர்.
2வது டெஸ்டில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 59.1 ஓவர் முடிவில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி முதல் நாள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று மார்ச் 13ம் திகதி தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பந்து வீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
[]
இதனைத்தொடர்ந்து, தற்போது 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.