இந்தியாவை சுருட்டியது இலங்கை! ஒற்றை ஆளாக போராடிய ஸ்ரேயாஸ் ஐயர்
பெங்களூருவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.
இதனையடுத்து 2 போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்டில் அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, மார்ச் 12ம் திகதி பெங்களூரு மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டி டிராவில் முடிந்தால் இந்திய அணி தொடரை கைப்பற்றும், இலங்கை அணி வெற்றிப்பெற்றால் 1-1 என்ற வெற்றிக்கணக்கில் தொடர் சமனில் முடியும்.
டெஸ்ட் தொடரை வெல்ல இலங்கை அணிக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், 2வது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருகின்றனர்.
2வது டெஸ்டில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 59.1 ஓவர் முடிவில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
Shreyas Iyer's elegant dual sixes.
— BCCI (@BCCI) March 12, 2022
Gave the charge, got to the pitch of the ball and dispatched it for a huge six. One in the crowd, one out of the ground. @ShreyasIyer15 special this.
?️?️https://t.co/hYMOuZohcc @Paytm #INDvSL pic.twitter.com/EdrmYEM4ZQ
மயங்க் அகர்வால் (4), ரோகித் சர்மா (15). விஹாரி (31), கோலி (23), பந்த் (39), ஸ்ரேயாஸ் ஐயர் (92), ஜடேஜா (4), அஸ்வின் (13), அக்சர் பட்டேல் (9), முகமது ஷமி (5) ரன்களில் அவுட்டாகினர்.
India are bowled out for 252☝️
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 12, 2022
It's been a fine bowling effort from Sri Lanka, led by Lasith Embuldeniya (3/94) and Praveen Jayawickrama (3/81). Shreyas Iyer starred for the home side with his innings of 92.
Scorecard ?: https://t.co/YXjgkrtKTZ#INDvSL pic.twitter.com/l5o44fzSqM
இலங்கை தரப்பில் எம்புல்தெனிய, ஜெயவிக்ரம 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில், தற்போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்கஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.