ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கிண்ணம்; அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை
srilanka beat india in asia cup rising stars semi final: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில், இலங்கை ஏ அணி, இந்திய ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கிண்ணம்
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண 2026 தொடர் நவம்பர் 19 ஆம் திகதி தொடங்கி, நவம்பர் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா தரப்பில், அபிஷேக் சர்மா (78), திலக் வர்மா (53), ஷாபாஸ் அகமது (54*) ஆகிய மூவரும் அரைசதம் விளாசினர்.

அதைத்தொடர்ந்து, 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், சினேத் ஜெயவர்தனா(105), லசித் க்ரூஸ்புல்லே(116) ஆகிய இருவரும் சதம் விளாசி, ஆட்டமிழந்தனர்.

அதைத்தொடர்ந்து 2 விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நிஷான் மதுஷ்கா 58 ஓட்டங்களும், அணித்தலைவர் பவன் ரத்னாயகே 31 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
41.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் குவித்த இலங்கை ஏ அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம், இந்திய அணி வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண தொடரிலிருந்து வெளியேறுகிறது.
இன்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டியில் வெற்றி பெரும் அணி, 29 ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும்.