இலங்கை பௌத்த பிக்குவிற்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை
srilankan buddhist monk Naotunne Vijitha jailed in australia: சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக இலங்கை பௌத்த பிக்குவிற்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பௌத்த பிக்குவிற்கு அவுஸ்திரேலியாவில் சிறை
அவுஸ்திரேலியா நாட்டின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண கோயிலின் தலைமைத் துறவியாக இருந்தவர் 71 வயதான நவோதுன்ன விஜாத.

1994 முதல் 2002 வரை ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோவில் உள்ள கோவிலுக்குச் சென்ற இளம் சிறுமிகளை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, 2023 ஆம் ஆண்டில் அந்தத் துறவி மீது குற்றம் சாட்டு பதியப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையின் போது, தான் அவ்வாறு செய்யவில்லை எனவும், அவர்களை தனக்கு நியாபகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, 71 வயதான நவோதுன்னே விஜித்தாவுக்கு 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரதீப் திவானா உத்தரவிட்டார்.
அவர் பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு, குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு விஜய்தா தனது ஆதரவாளர்களைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர்களில் சிலர் நீதிமன்றக் கூண்டின் அருகே வந்து அவரை நோக்கித் தலைவணங்கினர்.
இலங்கையில் பிறந்த நவோதுன்னே விஜித்தா, தனது 15 வயதில் பௌத்த துறவியாக தீட்சை பெற்றார்.
அதன் பின்னர் ஸ்வீடனுக்குக் குடிபெயர்ந்து குடியுரிமை பெற்ற அவர், 1994 ஆம் ஆண்டில் தம்ம சரணக் கோயிலின் தலைமைத் துறவி பதவியை ஏற்பதற்காக மெல்போர்னுக்குக் குடிபெயர்ந்தார்.
தனது தண்டனைக் காலத்தின் முடிவில் விஜய்தா நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொள்வதாகவும், அதனால் அவர் சுவீடனுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.