இலங்கையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
இலங்கை ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரான ரணில் விக்ரமசிங்கே வருகிற 30ம் தேதி இலங்கையின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரியுள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வருகிற 30ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வாரம் முழுவதும் அதன் மீதான விவாதம் நடைபெறும் என தெரிகிறது.
இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், குறித்த இடைக்கால பட்ஜெட்டின் மூலம் மக்களின் தேவைகளை ஓரளவு சரிசெய்ய முடியும், அவர்கள் தினமும் எரிபொருள் மற்றும் மின்சாரம் தட்டுப்பாட்டினை சந்தித்து வருகின்றனர்.
மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது, இந்த பட்ஜெட் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார்.