வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு! ஓரங்கட்டப்பட்ட மூத்த வீரர்கள்
வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி மே 23ம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மே 23, மே 28 என தொடர்ந்து 2வது மற்றும் 3வது ஒரு நாள் போட்டியும் அதே மைதானத்திலே நடைபெறவுள்ளது.
வங்க தேச சுற்றுப்பயணத்திற்கான 18 வீரர்கள் அடங்கிய அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
திமுத் கருணரத்ன, மேத்தியூஸ், சந்திமால் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.
குசால் பெரேரா கேப்டனாகவும் குசால் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணி விவரம்: குசல் பெரேரா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, நிஸ்ஸங்க, தசுன் சானக்க, அஷேன் பண்டாரா, வனிந்து ஹசரங்கா, இசுரு உதான, அக்கில தனஞ்சய, நிரோஷன் திக்வெல்ல, சமீர, ரமேஷ் மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, லக்சான் சந்தகேன், சாமிக்க கருணரத்ன, ஷிரான் பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
Sri Lanka announce 18-man squad for 3-match ODI series vs Bangladesh.
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) May 12, 2021
Kusal Perera as Captain
Kusal Mendis as Vice Captain
READ: https://t.co/Ucn0OTn4dX #SLvBAN pic.twitter.com/A7aivoNJUC
எதிர்வரும் மே 16ம் திகதி இலங்கை அணி வங்க தேசம் புறப்படும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.