இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன்! சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்
இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2.9 பில்லியன் டொலர் கடன் அளிக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில், வெளிநாடுகளிலிருந்து இதுவரை 5.1 பில்லியன் டொலர் வரை கடன் பெற்றுள்ளது.
இதில் 28 பில்லியன் டொலர் வரை 2027ம் ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில், அடுத்த 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இது முக்கியமான மைல்கல் என குறிப்பிட்டுள்ளார்.