இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்குபதிவில் வரலாற்று சாதனை படைத்த மாவட்டம்!
இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் வரலாறு காணாத 80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வரலாற்று வாக்குப்பதிவு
இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் வரலாறு காணாத 80% வாக்குகள் பதிவான நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் வாக்களிப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 6.5 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக இருந்தனர்.
நுவரெலியாவின் நான்கு தேர்தல் தொகுதிகளிலும், 534 வாக்குச்சாவடிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.
மாலை நான்கு மணி நிலவரப்படி, களுத்துறையில் 75%, காலி பகுதியில் 74%, வவுனியாவில் 72%, மன்னாரில் 72%, பதுளையில் 73%, ஹம்பன்தோட்டாவில் 78%, கேகாலையில் 75%, அனுராதபுரத்தில் 75%, மட்டக்களப்பில் 69% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதேபோல, குருணாகல் பகுதியில் 75%, முல்லைத்தீவில் 68%, கண்டியில் 78%, அம்பாறையில் 70%, திரிகோணமலையில் 69%, மாத்தளையில் 74% வாக்குப் பதிவும் நடைபெற்றுள்ளது.
மலையக மக்கள் உட்பட அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குப்பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் மொத்தம் 1703 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தபால் வாக்குகளை எண்ணுவதற்கென்று 429 மையங்கள் ஆகும். முதலில் அரசு ஊழியர்கள் பதிவு செய்த தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அமைதியான சூழல் நிலவும் பட்சத்தில் நாளை (செப் 22ம் திகதி) மதியத்திற்கு மேல் முடிவுகள் தெரியவரும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |