29 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை
srilanka end 2026 without tets win after 1997: 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாமல் இந்த ஆண்டை இலங்கை நிறைவு செய்துள்ளது.
டெஸ்ட் வெற்றி பெறாமல் ஆண்டை நிறைவு செய்த இலங்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை இழந்துள்ளது.
இதன் மூலம், 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த ஆண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாமல் ஆண்டை இலங்கை நிறைவு செய்துள்ளது.
இந்த ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 3 போட்டிகளை சமன் செய்துள்ளதோடு, 3 போட்டிகளில் தொலைவியடைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கையின் முந்தைய தொடர் வெற்றி, 2017 செப்டம்பரில் கிடைத்தது.
அதேவேளையில், 2024 அக்டோபரில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.