வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகிறேன்! இலங்கையில் கோடிக்கணக்கில் மோசடி செய்த போலி முகவர் கைது
இலங்கை மட்டக்களப்பில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த போலி முகவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கோடிக்கணக்கில் ஏமாற்றிய போலி முகவர்
இலங்கையின் மட்டக்களப்பில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்து 22 நபர்களிடன் தலா 4 லட்சத்து 50 ரூபாய் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் வசூலித்து போலி முகவர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.
ரூபாயை வாங்கிவிட்டு தங்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்ததை உணர்ந்த பணம் கொடுத்த இரண்டு பேர் போலி முகவருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறையீடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டனர்.
கைது செய்யப்பட்ட போலி முகவர்
அதன்படி ஆகஸ்ட் 13ம் திகதியான நேற்று அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவரின் வீட்டை கொழும்பில் இருந்து சென்ற வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் போலி முகவர் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்திய பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |