முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள் - ஆட்சியமைக்கு அநுர அரசு!

Anura Kumara Dissanayaka Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024 National People's Power - NPP
By Kirthiga Nov 16, 2024 05:52 AM GMT
Report

இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எவ்வாறு செயல்படுகிறது?

  • இலங்கை தேர்தல் ஆணையம் (ECSL) எனப்படும் சுயாதீன அமைப்பு தேர்தலை மேற்பார்வை செய்யும்.

  • ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன, அவை அனைத்தும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற உள்ளன.

  • அனைத்து உறுப்பினர்களும் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால் 225 ஆசனங்களில் 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலம் மறைமுகமாகத் தீர்மானிக்கப்படும். 

  • தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் அல்லது சுயேச்சைக் குழுவும் தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கட்சிக்கும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் எண்ணிக்கை அவர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள் - ஆட்சியமைக்கு அநுர அரசு! | Srilanka General Election 2024 Anura Npp Party Won

  • நாடாளுமன்றத்தில் வெற்றி பெற ஒரு கட்சி 113 இடங்களைப் பெற வேண்டும்.

  • இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் 17 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

  • நாடு முழுவதும் உள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆசனங்கள் 

தற்போதைய அரசியலமைப்பின் கீழ் விருப்பு வாக்குகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, எந்தவொரு தனிக் கட்சியாலும் இவ்வளவு பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 2010 இற்கு பிறகு மிகக் குறைந்த வாக்குப்பதிவு கொண்ட வாக்கெடுப்பில் 40 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 3 இடங்கள் கிடைத்தன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 8 ஆசனங்களும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற புதிய ஜனநாயக முன்னணிக்கு 5 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்தனியாக 1 இடங்களும் கிடைத்தன.

முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள் - ஆட்சியமைக்கு அநுர அரசு! | Srilanka General Election 2024 Anura Npp Party Won

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3 வெற்றி பெற்றது.

சர்வஜன பலய, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், யாழ்ப்பாணம் – சுயேட்சை குழு 17 மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி தலா ஒரு ஆசனத்தைப் பெற்றன. 

வாக்களித்த உடனேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தாம் பலமான ஆணையை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லாததால் ஆட்சியமைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை என்றார்.

முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த மக்கள்

வடக்கு பகுதியை பொறுத்தளவில், தமிழ்த் தேசியம் காக்கும் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.ஏ.சுமந்திரன், பல அரசாங்கங்களில் அமைச்சராகவும், பல பொறுப்புக்களை வகித்தவராகவும், மூத்த அரசியல்வாதியாகவும் அடையாளப்படுத்தப்படும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பெரும் தோல்வியடைந்துள்ளனர். 

மேலும் தென்னிலங்கையில் மிக முக்கிய அரசியல்வாதிகளாக, அமைச்சர்களாக, பல பொறுப்புக்களை வகித்தவர்களாக காணப்பட்ட பல அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற பிரவேசம் நிறைவடைந்துள்ளது.

எதிர்பாராத பல தோல்விகள், சொந்த தொகுதியிலேயே படு தோல்வி என்று தோல்விகளின் எண்ணிக்கை கடுமையாக பல முக்கிய அரசியல்வாதிகளுக்கு அதிகரித்துள்ளது.

தந்தையின் கொடூர மரணத்தை அடுத்து அரசியலுக்குள் அடி எடுத்து வைத்து, கட்சி மாறினாலும், தன்னை நாடாளுமன்றத்தில் மிக வலுவான ஒரு பெண் உறுப்பினராக நிலைநிறுத்திக் கொண்ட ஹிருணிக்காவையும் மக்கள் இம்முறை புறக்கணித்துள்ளனர்.

முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள் - ஆட்சியமைக்கு அநுர அரசு! | Srilanka General Election 2024 Anura Npp Party Won

தனக்கென்று சொந்த ஊரில் மிகப்பெரிய வாக்கு வங்கியை வைத்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகேவும் படுதோல்வியை சந்தித்துள்ளார். 

அத்துடன், சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, புத்திக பத்திரண, சன்ன ஜயசுமன, ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, ரோசி சேனாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, திலித் ஜயவீர, நிமல் லான்சா, பிரசன்ன ரணவீர, பிரேமலால் ஜயசேகர, அருந்திக பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திசாநாயக்க, ரொசான் ரணசிங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், ரோஹன திஸாநாயக்க, நிபுண ரணவக்க, கஞ்சன விஜேசேகர, மகிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன என்று பல அரசியல் தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

ஆட்சியமைக்கும் அநுர அரசு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குள் நுழைபவர்களில் மிக அதிகளவானவர்கள் புது முகங்களாகும்.

மேலும் பொதுத் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நன்றியையும் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்கு இந்தியா வாழ்த்துகளைத் தெரிவித்தது.

முக்கிய அரசியல்வாதிகளை தூக்கி எறிந்த இலங்கை மக்கள் - ஆட்சியமைக்கு அநுர அரசு! | Srilanka General Election 2024 Anura Npp Party Won

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கட்சியின் வெற்றிக்காக ஜனாதிபதியும் NPP தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மிருசுவில், Southend-on-Sea, United Kingdom

07 Nov, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Scarborough, Canada, Brampton, Canada

20 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Nov, 2014
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Bonneuil-sur-Marne, France

16 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US