கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் அஞ்சலி!
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Vijayakanth, DMDK ,VijayakanthRIP, RIPVijayakanth, PassedAway, PremalathaVijayakanth, captainvijayakanth, SenthilThondaman, SriLanka Governor