இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி! இந்திய அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு
இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி போட்டி
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் நாளை திருவனந்தபுரத்தில் மூன்றாவது போட்டி நடைபெறுகிறது.
கடைசி போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே நடைபெறும். இதனால் இந்த தொடரில் இடம்பெறாத வீரர்களுக்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம்.
bcci/The Indian Express
தொடக்க வீரர் சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இஷான் கிஷனுக்கு நாளைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் தமிழக ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் இடம்பெறலாம் என தெரிகிறது.
இந்திய அணி உத்தேச பட்டியல்
1. ரோகித் சர்மா, 2. சுப்மான் கில் / இஷான் கிஷன் . 3. விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல் / ஸ்ரேயாஸ் ஐயர், 6, வாசிங்டன் சுந்தர், 7, அக்சர் பட்டேல், 8, ஆர்ஸ்தீப் சிங், 9, முகமது சிராஜ், 10, உம்ரான் மாலிக், 11, சாஹல் / குல்தீப் யாதவ்