மீண்டும் களமிறங்கி விளையாடும் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் தில்ஷன்! உற்சாகத்தில் ரசிகர்கள்
பாகிஸ்தானில் நடைபெறும் காஷ்மீர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் தில்ஷன் பங்கேற்று விளையாடவுள்ளார்.
பாகிஸ்தானின் T20 தொடராக இருக்கும் காஷ்மீர் பிரிமியர் லீக் இம்மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த கிரிக்கெட் தொடரில் பல பிரபலான வீரர்களும், முக்கிய ஜாம்பவான்களும் பங்கேற்று விளையாடுகின்றனர்.
அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன் Kashmir Premier League கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
தங்களின் ஆதர்ஷ நாயகனான தில்ஷன் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.