லண்டனில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையர் சம்பவம்! 41 வயது நபர் கைது: வெளியான முக்கிய தகவல்
லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் East End-ல் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட Ranjith Kankanamalage(50) என்பவர் பல ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் திகதி Tower Hamlets கல்லறை பூங்காவில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அதன் பின் பொலிசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்த போது, பிரேதபரிசோதனை அறிக்கையில், இவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனால் நிச்சயமாக இது ஒரு கொலை தான் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த பயங்கர கொலை சம்பத்தால் LGBT+ சமூகத்தினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொலையாளியை கண்டுபிடிக்க 0,000 பவுண்ட்(இலங்கை மதிப்பில் 54,46,895 ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று(அக்டோபர் 27) இந்த கொலை சம்பவம் தொடர்பாக 41 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலைக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 36 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டக்காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து எந்த ஒரு தகவலும், விபரமும் வெளியாகவில்லை.
அவர்கள் தான் என்பது உறுதியானால், கொலையாளி தொடர்பான முழு விபரமும், இந்த கொலை சம்பவம் ஏன் நடந்தது என்பதும் தெரியவந்துவிடும். Ranjith Kankanamalage கொலை சம்பவம் லண்டனில் உள்ள LGBT+ சமூகத்தினரிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொலைகாரனை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று LGBT+ சமூகத்தினர் கடும் அழுத்ததை கொடுத்து வருவதால், இது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிசாருக்கோ அல்லது LGBT+ சமூகத்தினர் யாரிடாவது தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.