தஞ்சம்பெற சென்றவர்களை கொன்று குவித்து அதே இடத்தில் இராணுவ முகாம் அமைத்தனர்
தஞ்சம்பெற சென்றவர்களை கொன்று குவித்து அதே இடத்தில் இராணுவ முகாம்களை அமைத்தனர் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினரான பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தஞ்சம் பெற சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம்
சமீபத்தில் இலங்கை முல்லை தீவின் கொக்குழாய் என்று அழைக்கப்பட்ட பகுதியில் தோண்டப்பட்ட புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஜூன் 29ம் திகதி நீர் வழங்கல் வடிகால் சபை-யால் அப்பகுதி மக்களுக்கு நீர்வளங்களை வழங்குவதற்காக குழிகள் வெட்டும் போது சிதைந்த எலும்புகள், விடுதலை புலிகளின் ஆடைகள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் அடங்கிய புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தஞ்சம்பெற சென்றவர்களை கொன்று புதைத்து அதே இடத்தில் இராணுவ முகாம்களை இராணுவத்தினர் உருவாக்கினார்கள் என்று 2008 இறுதி போரின் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் தன்னுடைய வேதனையை வெளிபடுத்தியுள்ளார்.
அவர் லங்காசிறி வழங்கிய ஊடகத்தின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு வழங்கிய முழு பேட்டியின் வீடியோ கீழே உள்ள வீடியோவில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |