இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முதற்கட்ட அணியை அறிவத்தது இலங்கை!
எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 28 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் விளையாடவுள்ளது.
ஜூன் 23ம் திகதி இங்கிலாந்து-இலங்கை மோதும் முதல் டி-20 போட்டி நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக ஜூன் இரண்டாவது வாரம் தனி விமானம் மூலம் இலங்கை அணி இங்கிலாந்து பயணிக்கும் என கூறப்படுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 28 பேர் அடங்கிய முதற்கட்ட அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
28 பேர் கொண்ட முதற்கட்ட அணி ஜூன் முதல் வார இறுதிக்குள் 22 வீரர்கள் அடங்கிய அணியாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வங்க தேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இலங்கை அணித்தலைவராக செயல்பட்ட குசால் பெரேரா, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டி-20 மற்றும் ஒரு நாள் அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
28 அடங்கிய இலங்கை முதற்கட்ட அணி விவரம்:
- குசால் பெரேரா.
- தனுஷ்க குணதிலக்க.
- நிஸ்ஸங்க.
- அவிஷ்கா பெர்னாண்டோ.
- சதீரா சமரவிக்ரமா.
- ஓஷாதா பெர்னாண்டோ.
- குசால் மெண்டிஸ்.
- தனஞ்சய டி சில்வா.
- சரித் அசலங்கா.
- கமில் மிஷாரா.
- நிரோஷன் திக்வெல்ல.
- ஆஷென் பண்டாரா.
- தாசுன் ஷானகா.
- சாமிகா கருணாரத்ன.
- தனஞ்சய லக்ஷன்.
- வாணிந்து ஹசரங்கா.
- ரமேஷ் மெண்டிஸ்.
- லக்ஷன் சண்டகன்.
- அகில தனஞ்சயா.
- பிரவீன் ஜெயவிக்ரமா.
- சமீரா.
- இசுரு உதனா.
- பினுரா பெர்னாண்டோ.
- நுவான் பிரதீப்.
- ஷிரான் பெர்னாண்டோ.
- கசுன் ராஜிதா.
- அசிதா பெர்னாண்டோ.
- இஷான் ஜெயரத்ன.