கோட்டாபய வெற்றி இடங்களை தட்டிப் பறித்த அநுர! பரபரப்பு தேர்தல் முடிவுகள்
2024ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அநுரகுமார திசாநாயக்க-வின் மொட்டு கட்சிக்கு பொதுமக்கள் பெருமளவு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச முன்னிலை வகித்த 16 மாவட்டங்களில் தற்போது அநுரகுமார திசாநாயக்க 15 மாவட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.
2024ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கு பதிவில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15-ல் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்தார்.
தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் புதிய ஜனாதிபதியாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பத்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 15 மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளார்.
மீதமுள்ள நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 7 மாவட்டங்களில் சஜித் பிரேமதாச முதலிடம் பிடித்துள்ளார்.
வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் மூலம், கடந்த தேர்தலில் கோட்டாபயவிற்கு வழங்கிய பெருமளவு ஆதரவு இந்த முறை அநுரவிற்கு கிடைத்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் கடந்த முறை சஜித் தோல்வியடைந்த நிலையில் இந்த முறை முன்னிலை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |