5 மில்லியன் சுற்றுலா பயணிகளுக்கு இலக்கு: இலங்கைக்கு தேவைப்படுவது சரியான திட்டமிடல்!
2025ம் ஆண்டு இறுதிக்குள் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா துறையில் முன்னேற்றம்
இலங்கை சுற்றுலா துறை இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பொது பண்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ள தகவலில், 2025ம் ஆண்டின் ஜூலை மாத இறுதிக்குள் 1.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த போக்கு நீடித்தால் இந்த ஆண்டு இன்னும் 1.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் மட்டுமே நம்முடைய இலக்கை அடைய மீதமுள்ளவர்கள் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்தி, முறையான விளம்பரம் செய்வதன் மூலம் அடுத்த 2 முதல் 3 ஆண்டுக்குள் இலங்கை குறைந்தது 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |