ரூ.300 மில்லியன் ஒப்பந்தம் - இலங்கை பொலிஸாரின் வாகனத் தேவையை நிவர்த்தி செய்யும் இந்தியா
இலங்கை காவல் துறையின் வாகனத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதியுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் செயற்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வாகனங்களை வழங்குவதற்கு இந்த மானியம் பயன்படுத்தப்படும்.
இதன்படி, மானியத்தை முறைப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்து கொள்ள பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |