இலங்கையில் பிரசவிக்க பயமாக இருக்கிறது- கர்ப்பிணிகள் நிலை என்ன?

Sri Lanka Economic Crisis
By Fathima Jul 21, 2022 06:17 AM GMT
Report
Courtesy: BBC Tamil

"நான் ஒரு 8 மாத கர்ப்பிணி. இலங்கையில் என் பிரசவம் குறித்து நினைத்தாலே மரணபயமாக இருக்கிறது". இலங்கை வவுனியாவில் வசித்து வரும் 27 வயதான கர்ப்பிணி தக்ஷிலா நிரோஷினியின் வார்த்தைகள் இவை.

"என் இரும்புச்சத்து அளவு குறைவாக இருக்கிறது. என் கருவில் உள்ள சிசுவும் போதுமான அளவுக்கு வளரவில்லை. குழந்தைக்கான ஊட்டச்சத்து மருந்துகள் எல்லாம் எனக்கும் பரிந்துரைக்கபட்டன.

ஆனால், இங்கிருக்கும் பொருளாதார நிலையில், அதை வாங்க முடியவில்லை. நாளொன்றுக்கு ஒரே ஒரு வேளை உணவுண்டு மீதி வேளைகளில் பட்டினியால் அவதிப்படுகிறோம் நாங்கள்."

பணமும் இல்லை உணவும் இல்லை

வீட்டிலிருக்கும் தன் 9 வயது மகளுக்கும் வயிற்றிலிருக்கும் 8 வயது கருவுக்கும் உணவளிக்க இயலாமல், இலங்கையின் மற்ற தாய்மார்களைப் போலவே இவரும் தவித்து வருகிறார். பெரும்பாலான நாட்களில் ஒருவேளை சோறுதான். இவரிடம் இருக்கும் குறைந்த அளவு பணத்தில் 100கி சோயா உருண்டைகளை வாங்குகிறார். இப்போதைக்கு, அதுதான் அவருக்கு புரதத்துக்கான எளிய வழியாக இருக்கிறது.

தக்ஷிலாவின் கணவர் நாளொன்றுக்கு 1500 ரூபாய் சம்பாதித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக அவருக்கு வேலையில்லை. அரசு நடத்தும் மகப்பேறு மருத்துவ மையங்களில் இருந்து இணை உணவுகள் வந்துகொண்டிருந்தன.   

இலங்கையில் பிரசவிக்க பயமாக இருக்கிறது- கர்ப்பிணிகள் நிலை என்ன? | Srilanka Pregnant Woman

அதிகமான தட்டுப்பாடு குறைவான கையிருப்பு 

இலங்கை மத்திய வங்கியின்படி, நாட்டின் உணவுப்பற்றாக்குறை 57.4% என்ற உச்சத்தை மே மாதம் தொட்டது.  

அந்நிய செலாவணி நிலவரம் மிக மோசமடைந்து, அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதி ஆகியவற்றுக்காக இலங்கை போராடி வருகிறது. எரிபொருளுக்காக நாட்கணக்காக வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள்.  

எரிபொருளில்லை. எப்படி மருத்துவமனை செல்வது? 

எரிபொருள் பற்றாக்குறையால் தக்ஷிலாவை போன்ற தாய்மார்களின் தட்டுக்கு உணவு வருவது மட்டும் இங்கு பிரச்னை அல்ல.  

"என் பிரசவத்துக்கு மாவட்ட பொது மருத்துவனை செல்ல வேண்டும். இங்கிருந்து அது 8 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு அவசரம் என்றால் கூட, என்னால் விரைந்து அங்கு செல்ல முடியாது" என்கிறார் தக்ஷிலா.  

கடந்த வாரம் ஸ்கேன் பார்க்க செல்ல வேண்டி இருந்தது. ஆனால், பஸ் இல்லை. வந்த பஸ்களும் கூட கூட்டமாகவே இருந்தன. இப்போதிருக்கும் ஒரே வழி, மணிக்கணக்கில் காத்திருந்து ஒரு லாரியோ, டிரக்கோ பிடித்து செல்வதுதான்.  

இந்த கவலைகளெல்லாம் ஒன்று கூடி, இவரை, இதுவரை பிறக்காத தன் குழந்தையை எண்ணி வருத்தப்பட வைத்துள்ளன.  

இலங்கையில் பிரசவிக்க பயமாக இருக்கிறது- கர்ப்பிணிகள் நிலை என்ன? | Srilanka Pregnant Woman

ஏதாவது அவசரம் என்றால் எனக்கு அழையுங்கள் என்று மகப்பேறு பணியாளர் எனக்கு சொல்லியிருந்தார். அதேவேளை, பெட்ரோல் இருந்தால்தான் என்னாலும் வரமுடியும் என்றும் அவர் சொல்லிவிட்டார்.  

இதனால் பிரசவ வலி வரும் என்று எதிர்பார்க்கப்படும் தேதிக்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே மருத்துவமனையில் சேர்ந்து விட எண்ணிக்கொண்டிருக்கிறார் தக்ஷிலா.  

அவசர சேவைகள் திணறுகின்றன 

மகப்பேறு மரண விகிதம் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் ஆகியவற்றில் இலங்கையின் தரவுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், தற்போது, நாட்டில் 23 லட்சம் குழந்தைகள் உட்பட சுமார் 57 லட்சம் பேருக்கு, பொருளாதார நெருக்கடியால், மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.  

இலங்கையில் குறைந்த வருமானமுள்ள ஏராளமான குடும்பங்கள் நம்பியிருக்கக்கூடிய, பொது இலவச மருத்து முறைமையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சேவையின் கூற்றுப்படி, 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகின்றன. ஆனால், சில மருத்துவமனைகளில் மருந்து இருப்பும் இல்லை வரத்தும் இல்லை.  

"இரும்புச்சத்து குறைபாடு கொண்ட ஏராளமான தாய்மார்களை இலங்கையில் பார்க்க முடிகிறது" என்கிறார் ருஹான பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரும் மருத்துவருமான இரேஷா மம்பிட்டியா. மேலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி, மகப்பேறு மருத்துவ மையங்களுக்கு ஊட்டச்சத்து இணை உணவுகளை கொண்டுசேர்ப்பதிலும், வழங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  

அத்துடன் "ரத்தம் ஏற்ற வேண்டிய தேவையுடனும் இரும்புச்சத்து ஏற்ற வேண்டிய தேவையுடனும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. நாட்டின் எரிபொருள் தட்டுப்பாட்டால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைகளுக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.  

இலங்கையில் பிரசவிக்க பயமாக இருக்கிறது- கர்ப்பிணிகள் நிலை என்ன? | Srilanka Pregnant Woman

இலங்கையின் அவசர ஊர்தி சேவையான '1990' இல் 297 அவசர ஊர்திகள் உள்ளன. ஆனால், ஜூலை 11ஆம் தேதி, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை, அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததாகவும் அந்தச் சேவை தெரிவித்தது.  

"எப்போதுமே மக்களுக்கு உதவ எங்களால் இயன்ற அளவு முஅய்ற்சி செய்கிறோம். எங்கள் பணி நேரத்தை கடந்தும் பலநாட்கள் வேலை செய்துள்ளோம். அண்மைக்காலமாக கர்ப்பிணி பெண்களின் அழைப்புகள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கும் கூட எப்படியாவது உதவ முயற்சி செய்கிறோம்" என்கிறார் '1990 ஆம்புலன்ஸ் சேவை'யின் ஓட்டுநர் ஒருவர்.  

அச்சுறுத்தும் நாட்கள் 

ஒருபக்கம் எரிபொருளோ அல்லது பயணத்துக்கான ஏற்பாடோ ஏதாவது செய்ய குடும்பத்தினர் முயற்சித்துவரும் நிலையில், சில தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவிக்க வற்புறுத்தப்படுகிறார்கள்.  

மருத்துவமனை செல்லும் வழியில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் ஆட்டோவில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். இன்றைய சூழலில் ஆட்டோவில் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்கிறார் மருத்துவர் மம்பிட்டிய.  

இரண்டு வாரங்களுக்கு முன்பு, எங்கள் மருத்துவமனை வாசலில், ஆட்டோவுக்குள் இருந்தபடி, பிரசவவலியில் ஒரு அம்மா துடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஏற்கனவே குழந்தை வெளிவரத் தொடங்கிவிட்டது. நாங்கள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்னுக்கு உதவினோம்.  

வீட்டில் பிரசவம் பார்க்கும்போது திடிரென பெரும் இரத்தப்போக்கு ஏற்பட்டு அதன்பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். ஒருவேளை நோஆளிகள் மருத்துவமனைக்கு வந்துவிட்டாலும், அவர்களுக்கு சிகிசையளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவமனைக்கு வரவேண்டுமே. அதற்கும் சிரமமாகவே இருக்கிறது.  

மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் சிரமம் 

பொதுப்போக்குவரத்தும் சிரமமாகி எரிபொருளும் வாங்கமுடியாத நிலையால் சில மருத்துவர்கள் சைக்கிளில் வரத்தொடங்கி விட்டனர். இந்த நெருக்கடிகளால் மகப்பேறு மரண விகிதமும் நோயுள்ளவர்களின் எண்னிக்கையும் நாட்டில் அதிகரித்து விடுமோ என்பதுதான் பெருங்கவலையாக இருக்கிறது என்றும் மருத்துவர் மம்பிட்டிய தெரிவிக்கிறார்.  

இலங்கையில் பிரசவிக்க பயமாக இருக்கிறது- கர்ப்பிணிகள் நிலை என்ன? | Srilanka Pregnant Woman

எந்த சூழ்நிலையிலும், வீடுகளில் பிரசவம் பார்ப்பதை இலங்கை அரசு பரிந்துரைப்பதில்லை என்று அரசு குடும்ப நல சேவை அதிகாரிகள் குழு தெரிவிக்கிறது. இந்தக்குழுவின் தலைவர் பிபிசியிடம் பேசியபோது, "மருத்துவப்பணியாளர்களுக்கும் குறிப்பாக மகப்பேறு பணியாளர்களுக்கும் எரிபொருளை உறுதிசெய்வது மிகவும் கடினமாக இருக்கிறது" என்று தெரிவித்தார். இந்த நெருக்கடிக்கு முன்பு மகப்பேறு பணியாளர்கள் நேரடியாக கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று தாய்-சேய் நலத்தை உறுதி செய்வர். ஆனால், இப்போது எரிபொருள் தட்டுப்பாட்டால் இந்தப் பணியும் சிரமமாகியுள்ளது.  

அவசரகால பட்ஜெட் 

இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

அவரது உதவியாளரும் முன்னாள் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் பிபிசியிடம் இதுகுறித்து கூறுகையில், "ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படும் அவசர வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கு தற்காலிக ஜனாதிபதி முயற்சி செய்வதாக தெரிவித்தார்.  

சுகாதார அமைச்சர் உட்பட புதிய அமைச்சரவை அமைச்சர்கள் புதன்கிழமை வாக்கெடுப்பின் பின்னர், அடுத்த சுற்று தேர்தல் வரை பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதியை நியமிக்க வேண்டும். ஆனால் நெருக்கடி தொடர்வதால், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறக்காத குழந்தைகள் மட்டுமல்ல. போக்குவரத்து வசதியின்மையால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் இளைய தலைமுறையினரின் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.  

நான்காம் வகுப்பு படிக்கும் தக்ஷிலாவின் மகள், பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பல இலங்கை குழந்தைகளில் ஒருவர். "எனக்கு என் மகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் எதிர்காலம் குறித்து பயமாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் தவறுகளால் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் எங்களைப் போன்ற ஏழைகள் என்ன செய்ய முடியும்? இதுதான் எங்கள் கதி என்றும் நினைக்கிறோம்."  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Scarborough, Canada

23 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை

23 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மட்டக்களப்பு, கல்முனை, சுன்னாகம், வெள்ளவத்தை, கனடா, Canada

30 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான், பிரான்ஸ், France

23 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, தெல்லிப்பழை

23 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US